நான் உங்கள் இல்லத்தில் உதித்தவள். உங்கள் குருதி என் நரம்புகளில் ஓடுகிறது. ஆனால், இன்றுவரை
உங்கள் பார்வையில் நான் ஒரு ‘வாரிசாக’ அடையாளப்படவே இல்லை.
என்னை “குல விளக்கு” என்று போற்றித் தட்டிக் கொடுக்கிறீர்கள்; அதே கையால் என் சுதந்திரத்தைப் பறித்து
இருட்டறைக்குள் தள்ளுகிறீர்கள். இது என்ன நியாயம்? உங்கள் அன்பு எனக்கு ஒரு வேடமாகத் தெரிகிறது;
அது ஒரு பாரமாக என் ஆன்மாவை அழுத்துகிறது.
நான் பிறந்து வளர்ந்த ஊரில் எனக்கு எந்த உரிமையும் இல்லை . என்னால் வரி கட்ட முடியாது.
மறைவிற்குப் பின் என் உடலை புதைக்க ஒரு பிடி மண் கிடைக்குமா என்பதும் தெரியவில்லை.
என்னை ஒரு பிச்சைக்காரியாக்கிவிட்டீர்கள்; ஆனால் நான் பிச்சைக்காரி அல்ல! இந்த மண் என்னை மறுத்தால்
மறுக்கட்டும்—நான் நடக்கும் தரை என்னுடையது, நான் சுவாசிக்கும் காற்று என்னுடையது. இந்த உடல் இன்றி
இறைவனால் கூட ஒரு மனிதனைப் படைக்க முடியாது. புத்தர் முதல் அரிஸ்டாட்டில் வரை அனைத்து மாமேதைகளையும்
கருவில் சுமந்து ஈன்றவள் நான்! நான் உங்களைச் சபிக்கவில்லை; உங்கள் கர்மா உங்களைக் கவனித்துக்கொள்ளும்.
✦ எனக்குத் திருமணம் நடக்கிறது என்றால், ஒரு சிறு தொகையையும் சில நகைகளையும்
தந்துவிட்டு, “பெண்ணுக்குச் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டோம்” என மார்தட்டிக் கொள்கிறீர்கள்.
ஆனால் அது என்ன? எனக்குச் சேர வேண்டிய சொத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லாத ஒரு அற்பமான ‘செட்டில்மென்ட்’
தானே? மகனுக்குச் சொத்து முழுவதையும் எழுதி வைக்கிறீர்கள். அவன் எதையும் இழப்பதில்லை; அவன் வீட்டுக்கு வரும்
பெண்ணும் சொத்தோடும் சீரோடும் வருகிறாள்—அவன் அதைச் சேர்த்துக்கொள்கிறான். ஆனால் நானோ என் வேரைத் துறந்து
வெளியேறுகிறேன். இதுதானா உங்கள் நீதி?
திருமணம் முடிந்ததும் எனக்கான உரிமைகள் முடிந்துபோகின்றன என்பது உங்கள் வியாபாரத் தந்திரம்.
திருமணத்தை ஒரு சாக்காக வைத்து எனக்குச் சொத்தில் பங்கு தராமல் தப்பித்துக்கொள்கிறீர்கள்.
படிப்பில் நாட்டமில்லாத மகனுக்கு விலையுயர்ந்த வாகனமும், மேல்தட்டு கல்லூரியும் தாராளமாகக் கிடைக்கிறது.
ஆனால், நான் படிக்க விரும்பினால் “கட்டணம் குறைந்த கல்லூரியைத் தேடு” என்று சொல்கிறீர்கள்;
என்னை ‘பகுதி நேர வேலைக்கு’ அனுப்புகிறீர்கள். இது அன்பா? இல்லை, இது லாபம் பார்க்கும் உங்களின் கணக்கு!
மகன் உங்கள் இரத்த வாரிசு என்றால், நானும் உங்கள் இரத்த வாரிசுதான். இந்த உலகம் இந்திரா காந்தியையும்,
பெனாசிர் பூட்டோவையும் வாரிசுகளாக ஏற்றுக்கொண்டது. நீங்கள் மட்டும் ஏன் எனக்குச் சம உரிமை தர மறுக்கிறீர்கள்?
நான் பெண் என்பதாலா? அல்லது என் பங்கு “வேறு வீட்டுக்கு”ப் போய்விடும் என்ற பயமா?
உங்கள் மருமகள் கொண்டு வரும் சொத்து உங்கள் வீட்டுக்கு வரும்போது இனிப்பாகத் தெரிகிறது;
உங்கள் மகள் கொண்டு போனால் மட்டும் அது கசக்கிறதா?
☸ மறுபிறவியிலும் கர்மாவிலும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்:
இன்று எனக்கு இழைக்கும் இந்த அநீதி, நாளை உங்கள் மகனுக்கு மகளாக நீங்கள் பிறக்கும்போது உங்களுக்குப் புரியும்.
இது சாபமல்ல; நீங்கள் விதைத்த வினையின் அறுவடை!
என்னை “விளக்கு” எனப் புகழ்ந்துவிட்டு, சிறகுகளை ஒடித்துக் கூண்டுக்குள் அடைப்பதுதான் நீங்கள் தரும் “பாதுகாப்பா”?
நான் பிச்சை கேட்கவில்லை; உங்கள் இரத்தமாகப் பிறந்தவள் என் பிறப்புரிமையைக் கேட்கிறேன்.
இருட்டில் வாழும் புழுவாக இறக்க நான் தயாரில்லை. சுதந்திரம் என்பது நீங்கள் தரும் பிச்சையல்ல;
அது என் பிறப்புரிமை!
இந்த எழுத்துக்கள் ஒவ்வொரு பெண்ணின் குரலாக மாறட்டும். வாரிசு என்பது ஆண்-பெண் இருமை அல்ல; அது இரு சமமான இதயத் துடிப்புகள்.
மண்ணும் மகளும் தனியல்ல. உரிமை என்பது இரத்தத்தில் கலந்த பிறப்புரிமை.
I was born in your house. Your blood runs through my veins. Yet, to this day, I have never been seen
as an “heir” in your eyes.
You praise me as the “light of this family,” patting me with affection—but with the same hands, you
snatch away my freedom and push me into a dark prison. Where is the justice in this? Your love feels
like a mere mask to me; it weighs down my soul like a burden.
In the land where I was born, I do not own even a cent of soil. I cannot pay taxes. I don’t even know
if I will be granted a handful of earth to rest my body after death. You have reduced me to a beggar—
but I am not a beggar! Let that land reject me if it will—the ground I walk on is mine, the air I
breathe is mine. Without this body, even God cannot create a single human being. From Buddha to
Aristotle, I am the one who carried every great soul in my womb and gave birth to them! I do not curse
you; your karma will take care of you.
✦ When my marriage takes place, you hand over a small amount of money
and some jewelry, then proudly declare, “We have done everything for our daughter.” But what is that?
It is a meager “settlement” that is not even one-tenth of the inheritance I am entitled to. You write
the entire property in your son’s name. He loses nothing; the woman who enters his house brings wealth
and assets with her—he gains even more. But I, on the other hand, must uproot myself and leave. Is
this your sense of justice?
The idea that my rights end once I am married is your clever business strategy. Using marriage as an
excuse, you evade giving me my rightful share of property.
For your son who has no interest in studies, you generously buy expensive bikes and enroll him in
prestigious colleges. But when I wish to study, you tell me, “Look for a college with lower fees,” and
push me into part-time work. Is this love? No. This is your profit-and-loss calculation.
If your son is your blood heir, so am I. The world has accepted Indira Gandhi and Benazir Bhutto as
heirs and leaders. Why do you alone refuse to grant me equal rights? Is it because I am a woman? Or is
it the narrow fear that my share will “go to another household”? When your daughter-in-law brings
wealth into your home, it feels sweet; but when your own daughter takes her rightful share, does it
suddenly taste bitter?
☸ If you believe in rebirth and karma, remember this:
The injustice you do to me today will become clear to you when you are born as a daughter to your own
son tomorrow. This is not a curse—it is merely the harvest of the seeds you sow.
You praise me as the “light,” yet clip my wings and lock me in a cage—is that the “protection” you offer?
I am not begging. Born of your blood, I am asking for my birthright. I was not born to
live and die as a worm in darkness. Freedom is not a charity you grant me—it is my birthright!
Let these words become the voice of every daughter. Inheritance is not about gender—it is about equal
hearts beating with the same blood. The soil and the daughter are not separate. Rights are born from
the blood that flows within.
Leave a Reply